உலகம்

நவாஸ் ஷெரீப் சகோதரர்கள் என்னை 2 முறை கொல்ல முயற்சித்தனர்: ஆசிப் அலி குற்றச்சாட்டு

ANI

லாகூர்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது சகோதரர் தன்னை கொல்ல 2 முறை முயற்சித்தனர் என பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி குற்றம் சாட்டியுள்ளார். 

லாகூரில் நேற்று சனிக்கிழமை நடந்த கட்சி தொண்டர்களுடனான கூட்டத்தில் பாகிஸ்தான் முன்னாள் ஆசிப் அலி சர்தாரி (62) கலந்து கொண்டு பேசியதாவது: 
பாகிஸ்தானில் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் ஆகிய இருவரும் 1990-களில் தன்னை கொல்ல 2 முறை முயற்சித்தனர் என குற்றம் சாட்டியுள்ளார். 

நவாஸ் ஷெரீப்பிற்கு எதிரான ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராக செல்லும்பொழுது ஷெரீப் சகோதரர்கள் என்னை கொல்ல திட்டமிட்டனர் என்றும் குற்றம் சாட்டி பேசியுள்ளார். எனது ஆதரவை பெறுவதற்காக தற்பொழுது என்னுடன் தொடர்பு கொள்ள நவாஸ் முயற்சித்து கொண்டிருக்கிறார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். 

மேலும், அவர்கள் பெனாசீர் பூட்டோ (சர்தாரியின் மனைவி) மற்றும் எனக்கு செய்த விஷயங்களை நான் இன்னும் மறக்கவில்லை. நாங்கள் அவர்களை மன்னித்துவிட்டோம். ஏடிஆர்-வுடன் இணைந்து ஜனநாயகம் என்ற சாசனத்தில் கையெழுத்திட்டோம். ஆனால், இன்னும் அவர் எனக்கு துரோகம் செய்து வருகிறார். மெமோகேட் சர்ச்சையில் என்னை ஒரு தேசதுரோகியாக முத்திரை குத்துவதற்காக நவாஸ் ஷெரீப் நீதிமன்றம் செல்கிறார் என்றும் அவர் ஒரு துரோகி என்று சர்தாரி கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர்களை சர்தாரி சந்தித்து பேசி வருகிறார்.

அப்போது, ஷெரீப் சகோதரர்கள் நம்பத்தகுந்தவர்கள் அல்ல, ""அவர்கள் விரைவாக தங்களின் வண்ணங்களை மாற்றிவிடக்கூடியவர்கள். அவர்கள் சிக்கலில் இருக்கும்போது மட்டும் உங்களோடு ஒத்துழைக்கத் தயாராக உள்ளவர்கள்" என்று சர்தாரி மன்ஜூர் கூறியதை சர்தாரி மேற்கோளிட்டு பேசி வருகிறார். 

மேலும் "அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களுக்குப் பிறகு நாங்கள் வலுவான நிலைக்குத் தள்ளப்படுவோம்," என்று கூறியுள்ளார். 

முன்னதாக, சர்தாரிக்கு சர்ச்சைக்குரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபரான மாலிக் ரியாஸ் மூலம் ஷெரீப் ஆதரவளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மதுரை மத்திய சிறைக் கைதிகள் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2: சிஇஓஏ பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ரஷியாவுக்கான ஜொ்மனி தூதா் திரும்ப அழைப்பு

ரூ,7.50 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானை

SCROLL FOR NEXT