உலகம்

கல்லூரித் தோழருடன் அடுத்த ஆண்டில் திருமணம்: ஜப்பான் இளவரசி அறிவிப்பு

DIN

கல்லூரித் தோழரை அடுத்த ஆண்டில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஜப்பான் இளவரசி மேக்கோ ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
ஜப்பான் இளவரசி மேக்கோ (25) பேரரசர் அகிஹிட்டோவின் மூத்த பேத்தியாவார். அகிஷினோ-கிகோ தம்பதியரின் மகளான இவர் டோக்கியோவில் உள்ள சர்வதேச கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் தன்னுடன் ஒன்றாகப் படித்த கீ கொமுரோ என்ற இளைஞரைக் காதலித்தார். அவர் அரச பரம்பரை பின்னணி இல்லாத சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். தற்போது, கீ கொமுரோ சட்ட அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர்களது காதலுக்கு அரச குடும்பம் பச்சைக் கொடி காட்டியதையடுத்து அவர்கள் இருவரும் அடுத்த ஆண்டில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தனர்.
இளவரசியான மேக்கோ சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொள்வதால் சட்டப்படி அவர் அரச குடும்ப அந்தஸ்தை இழக்க நேரிடும் .
ஜப்பான் இளவரசி திருமண அறிவிப்பு குறித்து கூறுகையில், இது உண்மையிலேயே மகிழ்ச்சி தரும் தருணமாகும். திருமணம் செய்து கொண்டால் அரச அந்தஸ்து போய்விடும் என்பது எனக்கு சிறுவயதிலேயே தெரியும். இருப்பினும், அரச குடும்பத்தில் என்னுடைய கடமைகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளேன். தற்போது எனது சொந்த வாழ்க்கையை விரும்பி ஏற்கவுள்ளேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT