முகப்பு
உலகம்

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்குக்கு பெண் குழந்தை பிறந்தது

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:49 PM
பகிர்:

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் - ப்ரிஸில்லா சான் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதை மார்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார். மேலும், பிறந்த குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டார்.

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் மற்றும் அவரது காதல் மனைவி ப்ரிஸில்லா சான் தம்பதிக்கு முன்னரே மேக்ஸ் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், தற்போது இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

சமூக வலைதளங்களில் இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. மேலும், இணையவாசிகளிடம் இந்தப் புகைப்படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

அதுமட்டுமல்லாமல், பலதரப்பில் இருந்தும் மார்க் தம்பதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. மேலும், தனது பதிவில் குழந்தையுடன் இருப்பது அனைத்தையும் மறந்துவிடச் செய்கிறது என்று கேப்ஷன் போட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 28-ந் தேதி தங்களது குடும்பத்தில் புது வரவு வரவிருப்பதாக அப்போதே மார்க் ஸக்கர்பெர்க் தகவல் வெளியிட்டிருந்தார்.

மேலும், சொந்த நிறுவனமாக இருந்தாலும் குழந்தையை கவனித்துக்கொள்ளவதற்காக 2 மாதங்களுக்கு மார்க் ஸக்கர்பெர்க் விடுப்பு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.