உலகம்

ஆட்டுக்குட்டி இறைச்சி விளம்பரத்தில் விநாயகர்: சர்ச்சைக்குரிய ஆஸ்திரேலிய விளம்பரம்! (விடியோ இணைப்பு) 

DIN

சிட்னி: ஆட்டுக்குட்டி இறைச்சியை பிரபலப்படுத்தும் வகையில் ஆஸ்திரேலியாவில் வெளிவந்துள்ள விளம்பரம் ஒன்றில், இந்துக் கடவுளான விநாயகர் இடம்பெறுவது கடும் கண்டங்களை எழுப்பியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் இறைச்சி, கால்நடை தொடர்பான ஆய்வுகள் மற்றும் அதை சந்தைபடுத்துதல் பற்றிய விஷயங்களை மேற்கொள்ளும் நிறுவனமாக 'இறைச்சி மற்றும் கால்நடை ஆஸ்திரேலியா' செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனமானது தற்பொழுது ஆட்டுக்குட்டி இறைச்சியை பிரபலப்படுத்தும் வகையில் விளம்பரம் ஒன்றினை வெளியிட்டுள்ளது. 

அந்த விளம்பரத்தில் விருந்து ஒன்று நடப்பது போலவும், அந்த விருந்து மேசையில் விநாயக கடவுள், ஜீசஸ் மற்றும் புத்தர் வேடங்களை அணிந்த நபர்கள் உட்பட பலர் அமர்ந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் ஆட்டுக்குட்டி இறைச்சியின்  பெருமையை பேசி விளம்பரம் செய்வது போலவும், அவர்களில் சிலர் ஆட்டுக்குட்டி இறைச்சி சாப்பிடுவது போலவும் விளம்பரத்தில் உள்ளது. .

இந்த விளம்பரமானது ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து சமுதாயத்தினரிடையே கடும் கண்டனங்களை உண்டாக்கியுள்ளது. சமூகவலைதளங்களில் பலர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துவருகின்றனர்.

இது தொடர்பாக 'இறைச்சி மற்றும் கால்நடை ஆஸ்திரேலியா' நிறுவன மேலாளர் ஆண்ட்ரூ ஹோவி கூறியதாவது:

பல்வேறு பட்ட மக்களின் நம்பிக்கை, பின்னணி எல்லாவற்றையும் மீறி ஆட்டுக்குட்டி உங்களை இணைக்கும் என்பதையே இந்த விளம்பரத்தில் கூறியுள்ளோம். நவீன ஆஸ்திரேலிய சமுகத்தின் பன்முகத்தன்மையை முன்னிலைப்படுத்துவைத்து போல இந்த விளமபரம் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறுஅவர் தெரிவித்தார். ஆனாலும் சர்ச்சை இன்னும் ஓய்ந்த பாடில்லை.

விடியோ: 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT