உலகம்

மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 15 பேர் பலி

DIN


மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவின் தெற்குப் பகுதியில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 8.2 ஆகப் பதிவாகியுள்ளது.

கடந்த காலத்தில் மெக்சிகோ சந்தித்த மிக மோசமான நிலநடுக்கம் இது என்று அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.

அந்நாட்டு நேரப்படி வியாழக்கிழமை இரவு 11.49 மணியளவில், கடற்கரை நகரமான தொனாலாவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. 

நிலநடுக்கம் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டதும், தூக்கத்தில் இருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளையும், கட்டடங்களையும் விட்டு வெளியே ஓடி வந்தனர்.

நிலப்பரப்பில் இருந்து 69.7 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதும், அதனால் உண்டான பாதிப்புகளை கையாளும் தேசிய பேரிடர் தடுப்பு மையத்தில், அவசரகால உதவிகளை நேரடியாக கண்காணித்துவந்த அந்நாட்டு அதிபர் என்ரிக் பெனா நீடோ, கடந்த 100 ஆண்டுகளில், மெக்சிகோவை பாதித்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது என்று கூறியுள்ளார். 

பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மெக்சிகோ கடற்பகுதிகளில் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்  சுனாமி எச்சரிக்கை விடுத்தது. அதே சமயம், அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தில் இந்த நிலநடுக்கத்தின் அளவு சற்று வேறுபட்டு 8.1 ஆகப் பதிவாகியுள்ளது

கடந்த 1985ம் ஆண்டு இதேப்போன்றதொரு நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் 10 ஆயிரம் பேர் மெக்சிகோ சிட்டியில் உயிரிழந்தனர். இதுவே மிகப்பெரிய பேரிடராகக் கருதப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு பகுதிகளில் நேரிட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கி 10 பேர் பலியாகியுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மெக்சிகோ, மத்திய அமெரிக்க நகரான கௌதமாலா, எல் சல்வடார், கோஸ்டா ரீகா, நிகராகுவே, பனாமா, ஈக்குவேடார் உள்ளிட்ட கடற்கரையோர நகரங்களுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT