உலகம்

மெக்ஸிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு

DIN

மெக்ஸிகோவில் வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது.

மெக்ஸிகோவுக்கு தெற்கே சியாபாஸ் மாகாணத்தில் உள்ள டோனலா நகரிலிருந்து 100 கி.மீ. தொலைவில் கடலுக்கு அடியில் வியாழக்கிழமை இரவு (இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 10.20 மணி) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 69.7கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.2 அலகுகளாகப் பதிவானது.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் காணாத மிகவும் வலுவான இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 32 பேர் உயிரிழந்தனர் என முதலில் தெரிவிக்கப்பட்டது.
தலைநகர் மெக்ஸிகோ சிட்டி முழுவதும் நிலநடுக்கத்தின் தாக்கம் கடுமையாக உணரப்பட்டது. வீடுகள் பயங்கரமாக குலுங்கின. இதனால், பொதுமக்கள் கட்டடங்களிலிருந்து உடனடியாக வெளியேறி திறந்த வெளிகளில் தஞ்சமடைந்தனர்.

ஆக்ஸகா மாகாணத்தில் உள்ள ஜுகிட்டான் நகரில் பெரும்பாலான கட்டடங்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டன. பல கட்டடங்கள் சரிந்தன. சில கட்டடங்கள் முற்றிலும் தகர்ந்தன. அங்கு, மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து, மெக்ஸிகோ கடற்கரைப் பகுதிகளை மூன்று மீட்டர் அளவிலான சுனாமி அலை தாக்க வாய்ப்புள்ளதாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

SCROLL FOR NEXT