உலகம்

"வங்கதேசத்தில் 3 லட்சம் ரோஹிங்கயாக்கள்'

DIN

வன்முறையைத் தொடர்ந்து மியான்மரிலிருந்து சுமார் 3 லட்சம் ரோஹிங்கயாக்கள் வெளியேறி வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்று ஐ.நா. அகதிகள் நல ஆணையம் தெரிவித்தது.
இது தொடர்பாக அந்த ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஜோசப் திரிபுரா தெரிவித்திருப்பது: கடந்த ஆகஸ்ட் மாத இறுதி முதல் மியான்மரிலிருந்து வங்கதேசம் வரும் ரோஹிங்கயா அகதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்ற இரு வாரங்களில் சுமார் 3 லட்சம் ரோஹிங்கயா அகதிகள் வங்கதேசம் வந்துள்ளனர். மியான்மரையொட்டிய வங்கதேச எல்லைப் பகுதிக்குள் ஐ.நா. அகதிகள் நல ஆணையத்தின் சார்பில் அகதிகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அவை நிரம்பி வழிகின்றன. எல்லையையொட்டிய பல சிறு கிராமங்களிலும், வழியோரங்களிலும், வெட்ட வெளியிலும் ஆயிரக்கணக்கான அகதிகள் தங்கியுள்ளனர். புதன்கிழமை 300-க்கும் அதிகமான படகுகளில் அகதிகள் வந்தனர் என்றார் அவர்.
வங்கதேசத்துக்கு அண்மையில் வந்த ரோஹிங்கயா அகதிகள் எண்ணிக்கை சுமார் 1.64 லட்சம் என்று ஐ.நா. வியாழக்கிழமை தெரிவித்திருந்தது. ஆனால் ஐ.நா. அகதிகள் நல ஆணையம் அதைவிட இரு மடங்கு எண்ணிக்கையைக்
குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT