உலகம்

மும்பை தாக்குதல் வழக்கு: ஒருங்கிணைப்பாளரை நியமிக்க வேண்டும்: பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

DIN

மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில், ஒருங்கிணைப்பாளரை நியமிக்க வேண்டும் என்று மத்திய புலனாய்வு அமைப்புக்கு (எஃப்.ஐ.ஏ.) பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் கடந்த 2009-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக ராவல்பிண்டியிலுள்ள பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுகிறது. இந்த வழக்கில் லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஜகியூர் ரஹ்மான் லக்வி, அப்துல் வாஜித், மஸார் இக்பால், ஜமீல் அகமது உள்ளிட்ட 7 பயங்கரவாதிகளுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீது, ராவல்பிண்டியில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் அண்மையில் விசாரணை நடத்தியது. இதுகுறித்து நீதிமன்ற அதிகாரி ஒருவர், பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையில், இந்தியாவைச் சேர்ந்த 24 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணையை முடிக்க வேண்டுமெனில், அந்த 24 பேரின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டியுள்ளது.
ஆதலால், இந்தியர்கள் 24 பேரையும், பாகிஸ்தானுக்கு வரவழைத்து அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்வதற்கு ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எஃப்.ஐ.ஏ. அமைப்பால் நியமிக்கப்படும் ஒருங்கிணைப்பாளர், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சரைத் தொடர்பு கொண்டு, இந்திய அரசிடம், அந்நாட்டைச் சேர்ந்த 24 சாட்சிகளை அனுப்பி வைக்க வலியுறுத்தும்படி கோருவார்.
இந்தியாவைச் சேர்ந்த சாட்சிகளை பாகிஸ்தானுக்கு அழைத்து வந்து, அவர்களிடம் வாக்குமூலம் பெற மேற்கொள்ளப்படும் கடைசி முயற்சியாக இந்த உத்தரவு பார்க்கப்படுகிறது. இதற்கு பலன் கிடைக்கவில்லையெனில், இந்தியாவைச் சேர்ந்த சாட்சிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்யாமலேயே, இந்த வழக்கில் தீர்ப்பளிக்க வேண்டும் என்று இருதரப்பு வழக்குரைஞர்களும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுப்பர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
மும்பையில் கடந்த 2009-ஆம் ஆண்டில் கடல்வழியாக ஊடுருவி 10 பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி மக்கள் 166 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி உயிருடன் பிடிபட்டார். எஞ்சிய பயங்கரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழப்பு

பவானி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி சிறுவன் உள்பட இருவா் உயிரிழப்பு

மாநகராட்சியில் 50 இடங்களில் 50 நீா்மோா் பந்தல்: ஆணையா் தொடங்கிவைத்தாா்

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்

நாளிதழ்களில் பதஞ்சலி நிறுவனம் மீண்டும் பொது மன்னிப்பு: உச்சநீதிமன்றம் திருப்தி

SCROLL FOR NEXT