உலகம்

உலகின் அதிக எடை கொண்ட பெண் மரணம்

DIN

உலகின் அதிக எடை கொண்ட பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக எகிப்து நாட்டின் இமான் அப்துல் அட்டி இருந்தார். பிறக்கும்போதே 5 கிலோ எடை இருந்தவர்.

குழந்தை முதலே தைராய்டு பிரச்னை காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனால் இளமைக்காலத்திலேயே உடலில் அதிக எடை கூட ஆரம்பித்தது. இதனால் பள்ளிப்படிப்பையும் கைவிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

நாளடைவில் உடல் எடை அதிகளவில் அதிகரிக்க, அவரால் தனது அன்றாடப் பணி செய்வதிலேயே சிரமம் ஏற்பட்டது. பின்னர் படுத்த நிலையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், உடல் எடை குறைப்பு சிகிச்சை மேற்கொள்ள இமான், இந்தியா வரவழைக்கப்பட்டார். இங்கு உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

சுமார் 20 மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதன்காரணமாக சுமார் 325 கிலோ உடல் எடையைக் குறைத்தார்.

இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் மேல் சிகிச்சை பெற அரபு நாட்டுக்குச் சென்றார். அங்கு அபுதாபியில் உள்ள பிரபல புர்ஜீல் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அங்கு இதயம், சிறுநீரகம் உள்ளிட்டவை மெல்ல செயலிழக்கத் துவங்கின. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மாரடைப்பு ஏற்பட்டு செப்டம்பர் 25, திங்கள்கிழமை மரணமடைந்தார்.

இத்தனை காலம் இமாமுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் அவரது குடும்பத்தார் நன்றி தெரிவித்தனர். மேலும், அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு புர்ஜீல் மருத்துவமனை ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT