உலகம்

ஜப்பான் நாடாளுமன்றம் 'திடீர்' கலைப்பு: முன்கூட்டியே தேர்தல் நடத்த திட்டமிடும் பிரதமர் அபே! 

DIN

டோக்யோ: ஜப்பான் நாடாளுமன்றத்தை திடீர் என்று கலைத்துள்ள பிரதமர் ஷின்சோ அபே, முன்கூட்டியே தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜப்பானின் லிபரல் டெமாக்ரட்டிக் கட்சி கூட்டணியின் சார்பாக 2012-ஆம் ஆண்டு முதல் அதிபராக இருப்பவர் ஷின்சோ அபே. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வருகிறார்.

இவரது ஆட்சி மீதான விமர்சனங்களை முன்வைத்து முன்னாள் அமைச்சரும், தற்போதைய டோக்யோ ஆளுநருமான கொய்க்கே தொடர் பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தார். இதனால் உண்டான அழுத்தங்களின் காரணமாக ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழவைக்கு இடைக் காலத் தேர்தல் நடைபெறும் என்று பிரதமர் ஷின்சோ அபே திங்கள்கிழமை திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.

தலைநகர் டோக்கியோவில் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். நாடாளுமன்ற கீழவையை வரும் செப். 28-ஆம் தேதி கலைத்துவிட்டு இடைக் காலத் தேர்தல் நடத்த அரசு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனால் இடைக் காலத் தேர்தல் தேதி எதையும் அவர் அறிவிக்கவில்லை.

சமீப காலங்களாக நடைபெறும் பல்வேறு கருத்துக்கணிப்புகளில் பிரதமரின் லிபரல் டெமோக்ரட்டிக் கட்சிக்கு ஆதரவு அதிகமாகி இருப்பதால் அவர் இந்த முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தேதி அறிவிக்கப்பட விட்டாலும் அக்., 22-ஆம் தேதி தேர்தல் நடைபெறக் கூடும் என்று கூறப்படுகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT