பாகிஸ்தான்: விபத்தை ஏற்படுத்திய அமெரிக்க தூதரக அதிகாரி கைது
பாகிஸ்தானில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் அமெரிக்க தூதரக அதிகாரியை அந்நாட்டுப் போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.
பாகிஸ்தானில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் அமெரிக்க தூதரக அதிகாரியை அந்நாட்டுப் போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
பாகிஸ்தானில் உள்ளஅமெரிக்க தூதரக அதிகாரியான சாத் ரெக்ஸ் ஆவ்பர்ன் ஓட்டிச் சென்ற கார் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அந்த பைக்கை ஓட்டி வந்த நசாகட் இஸ்லாம் மற்றும் பின்னால் அமர்ந்திருந்த நபர் ஆகிய இருவரும் காயமடைந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக காவல்துறை சார்பில் இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பைக்கை பொறுப்பற்ற வகையில் ஓட்டி வந்த தூதரக வாகனத்தின் மீது மோதியது தொடர்பாக இஸ்லாமுக்கு எதிராக ஒரு வழக்கும், மோதலைத் தொடர்ந்து வழக்கு விசாரணையில் தலையிட்டது தொடர்பாக அமெரிக்க தூதரக தலைமை பாதுகாப்பு அதிகாரி தைமூர் பிர்ஸாடாவுக்கு எதிராக இரண்டாவது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட தூதரக அதிகாரியான ஆவ்பர்ன் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். விபத்தை ஏற்படுத்திய தூதரக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.