உலகம்

மோசமான வானிலை காரணமாக நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் 200 யாத்ரீகர்கள் 

நேபாளத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக புனித யாத்திரை சென்ற 200 யாத்ரீகர்கள் சிக்கித்  தவித்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

காத்மாண்டு: நேபாளத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக புனித யாத்திரை சென்ற 200 யாத்ரீகர்கள் சிக்கித்  தவித்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

நேபாளத்திற்கு கைலாச புனித யாத்திரை சென்ற குழுக்களில் இருந்து 200 பேர் மட்டும் சிமிகோட் என்ற பகுதியில் ஏற்பட்ட மோசமான வானிலையின் காரணமாக, அங்குள்ள மலைப்பகுதிகளில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர் என்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

நேபாளத்திலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சிக்கியுள்ள யாத்ரீகர்களுடன்  தொடர்பில் இருந்து வருகின்றனர்.  அத்துடன் அவர்களின் குடும்பத்தினருடமும் தொடர்பில் உள்ளனர்.

இதுதொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது: 

சிமிகோட் பகுதியில் 500 யாத்ரீகர்கள் தங்குவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளன. அங்குள்ள யாத்ரீகர்களுக்கு ஆரம்பகட்ட மருத்துவப் பரிசோதனை செய்வதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன.  எனவே சிக்கியுள்ள 200 பேர் குறித்து பற்றி அச்சப்படத் தேவையில்லை.  வானிலை சீரடைந்த பின்னர்

சிக்கியுள்ள அனைவரையும் விமானங்களை அனுப்பி பாதுகாப்புடன் மீட்டு வருவோம்.

இவ்வாறு தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

SCROLL FOR NEXT