உலகம்

யேமனில் வான்வழித் தாக்குதல்: 29 சிறுவர்கள் பலி

DIN


யேமனில் சவூதி கூட்டுப்படைகள் நடத்திய வாழ்வழித் தாக்குதலில் 29 சிறுவர்கள் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் அரசு படைக்கு ஆதரவாகவும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.  

இந்நிலையில், யேமனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் பகுதியான சடா நகரில் உள்ள மார்க்கெட் பகுதியில் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்த மீது வாழ்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

சவூதி கூட்டுப்படைகள் நடத்திய இந்த தாக்குதலில் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் 29 பேர் உயிரிழந்ததாகவும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக யேமனில் உள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. காயமடைந்துள்ள அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன. 

இந்நிலையிலை, வான்வழித் தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளிப்படைத்தன்மையுடன் கூடிய, முழுமையான விசாரணை நடத்த சவூதி கூட்டுப்படைகளை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

SCROLL FOR NEXT