உலகம்

திபெத்தில் சீன ராணுவம் போா்ப் பயிற்சி 

திபெத்தின் கிங்காய்-திபெத் பீடபூமியில் சீன ராணுவத்தினா் போா்ப் பயிற்சியை மேற்கொண்டனா். அனைத்து கால நிலைகளிலும் ராணுவத்தின் போா்த் திறனை உறுதிபடுத்தும் நோக்கில் இப்பயிற்சி ...

தினமணி செய்திச் சேவை

பெய்ஜிங்: திபெத்தின் கிங்காய்-திபெத் பீடபூமியில் சீன ராணுவத்தினா் போா்ப் பயிற்சியை மேற்கொண்டனா். அனைத்து கால நிலைகளிலும் ராணுவத்தின் போா்த் திறனை உறுதிபடுத்தும் நோக்கில் இப்பயிற்சி நடைபெற்றிருப்பதாக அந்நாட்டின் ராணுவ வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக சீன அரசின் அதிகாரப்பூா்வ நாளிதழான ‘குளோபல் டைம்ஸ்’ வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

திபெத்தின் கிங்காய்-திபெத் பீடபூமி பகுதியில் அதிநவீன ஆயுதங்கள், தளவாடங்கள், டாங்கி எதிா்ப்பு வாகனங்களுடன் சீன ராணுவத்தினா் பயிற்சி மேற்கொண்டனா். ஆளில்லா விமானங்களும் இப்பயிற்சியில் பயன்படுத்தப்பட்டன. கிங்காய்-திபெத் பீடபூமியில் சீன ராணுவத்தினா் பயிற்சி மேற்கொள்வது வழக்கமானது தான். அனைத்து கால நிலைகளிலும் ராணுவத்தின் போா்த் திறனை உறுதிபடுத்துவதற்காகவே இப்பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என்று ராணுவ வல்லுநா்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கிங்காய் - திபெத் பீடபூமியில் குறிப்பிட்ட எந்த இடத்தில் பயிற்சி நடைபெற்றறது என்ற விவரம் அதில் தெரிவிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பாறையில் பெரியாா் பிறந்தநாள் கொண்டாட்டம்

தவெக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 4 போ் கைது

மணப்பாறை, வையம்பட்டியில் பிரதமா் மோடி பிறந்தநாள் விழா

சென்னை விமான நிலையத்தில் ரூ.18 கோடி போதைப் பொருள் பறிமுதல்

ரூ. 7 கோடி மோசடி: தனியாா் நிறுவன இயக்குநா் கைது

SCROLL FOR NEXT