உலகம்

ராஜபட்ச பிரதமராகச் செயல்பட அந்நாட்டு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை 

ராஜபட்ச பிரதமராகச் செயல்பட அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

DIN

கொழும்பு: ராஜபட்ச பிரதமராகச் செயல்பட அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு, அப்பதவியில் ராஜபட்சவை நியமித்து, அதிபர் சிறீசேனா கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டார்.

ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் ராஜபட்சவின் முயற்சி தோல்வி அடைந்த நிலையில் அதிபர் சிறீசேனா நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, புதிய தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார். 

இதற்கு எதிராக இலங்கை உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் வழக்கு தொடுத்தனர். அதில், சிறீசேனாவின் உத்தரவுகளுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனிடையே, இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபட்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் இருமுறை நிறைவேற்றிய போதிலும், அவர் இதுவரை பதவி விலகவில்லை. 

இதற்ககிடையில்  அந்நாட்டு எம்.பி.,க்கள் 122 பேர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ராஜபட்ச பிரதமராக செயல்படவும், அமைச்சரவை கூட்டம் நடத்தவும் இடைக்காலத் தடை விதித்தது. 

அத்துடன் ராஜபட்சவும், அவரால் அமைச்சராக நியமிக்கப்பட்டவர்களும், டிச., 12ம் தேதி நேரில் ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT