உலகம்

'பனாமா ஆவணங்கள்' ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரிப்புக்கு 7 ஆண்டு சிறை 

DIN

இஸ்லாமாபாத்: பனாமா ஆவணங்கள்' மூலம் வெளிவந்த ஊழல் விவகாரங்கள் தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரிப்புக்கு 7 ஆண்டு சிறைதண்டனை விதித்து 
பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

உலகையே அதிர வைத்த 'பனாமா ஆவணங்கள்' மூலம் வெளிவந்த ஊழல் மற்றும் சொத்துகுவிப்பு விவகாரங்கள் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரிப் மீது வழக்கு தொடுக்கப்பட்டு, வழக்கு விசாரணை பாகிஸ்தான் பொறுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் பனாமா ஆவணங்கள்' மூலம் வெளிவந்த ஊழல் விவகாரங்கள் தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரிப்புக்கு 7 ஆண்டு சிறைதண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அத்துடன் அவருக்கு ரூ.17 கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பின் பொருட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த நவாஸ் ஷெரிப், தீர்ப்பு விதிக்கப்பட்டவுடன் அங்கிருந்து சிறைச்சாலைக்கு நேரடியாக அழைத்துச் செல்லப்பட்டார். 

முன்னதாக ஊழல் பணத்தில் லண்டன் அவென்பீல்டு பகுதியில் குசு வீடுகளை வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு விதிக்கப்பட்ட தீர்ப்பில் நவாஸுக்கு  10 ஆண்டுகளும், அவரது மகள் மரியமுக்கு 7 ஆண்டு, மருமகன் கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

SCROLL FOR NEXT