உலகம்

ஈராக்கிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 'சர்ப்ரைஸ்' விசிட்: ராணுவ வீரர்களுடன் சந்திப்பு 

ஈராக்கிற்கு திடீர் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அங்கு முகாமிட்டுள்ள ராணுவ வீரர்களை சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றினார். 

DIN

பாக்தாத்: ஈராக்கிற்கு திடீர் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அங்கு முகாமிட்டுள்ள ராணுவ வீரர்களை சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றினார். 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதன் இரவு திடீரென ஈராக் நாட்டிற்குச் சென்று அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

ஈராக்கில் பாக்தாத்துக்கு மேற்கே உள்ள அமெரிக்கா மற்றும் ஈராக் கூட்டுப்படைகளின் விமான தளமான அல் ஆசாத் விமானப்படை தளத்திற்கு டிரம்ப் முதலில் சென்றார்.  அங்கு டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அமெரிக்க ராணுவ தலைவர்கள் மற்றும் வீரர்களை சந்தித்து அவர்களுடன் ட்ரம்ப் கலந்துரையாடினார். 
 
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களின் சிறப்பான பணிகளை பாராட்டிய அவர், அவர்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும்  புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். அத்துடன் அந்த வீரர்களுடன் புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தார். இந்த நிகழ்வில் அதிபரின் மனைவி மெலானியாவும் பங்கேற்றார்.

முன்னதாக விமானத்தில் தன்னுடன் பயணம் செய்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறும் திட்டம் எதுவும் இல்லை எனத் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற பின் டிரம்ப்பின் முதல் ஈராக் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா இறந்த பொருளாதாரமா? டிரம்ப்பின் பொய்யான விமர்சனத்துக்கு அவரது நிறுவனமே சாட்சி!

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் வேலை: காலியிடங்கள்: 105

ராமேசுவரம் - பனாரஸ் ரயில் புதுக்கோட்டையில் நின்றுசெல்லும்!

பெண்கள் சேவை மையத்தில் சமூகப் பணியாளர், ஐடி உதவியாளர் வேலை!

லாக்-அப் மரணம் அல்ல!காவல் நிலையத்தில் ஒருவர் மர்ம மரணம்!நடந்தது என்ன?காவல் ஆணையர் பேட்டி!

SCROLL FOR NEXT