உலகம்

பாக். அரசின் சட்டவிரோத நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் எதிர்கொள்வேன்

DIN

பாகிஸ்தான் அரசின் சட்டவிரோத நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் எதிர்கொள்வேன் என்று மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியான ஹஃபீஸ் சயீது தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஹஃபீஸ் சயீதின் ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பு, ஃபலா-ஏ-இன்சானியத், அல் அக்தர், அல் ரஷீத் ஆகிய பயங்கரவாத அமைப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பான அவசரச் சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் மம்னூன் ஹுசைன் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார். 
இதையடுத்து, ஹஃபீஸ் சயீதின் ஜமாத் - உத் - தவா மற்றும் அதன் கிளை அமைப்பான ஃபலா-ஏ-இன்சானியத் ஆகியவற்றுக்குச் சொந்தமான 60 பள்ளிகள், நூற்றுக்கும் மேற்பட்ட மதரஸாக்கள், 6 மருத்துவமனைகள் மற்றும் 150 ஆம்புலன்ஸ் வாகனங்களைக் கையகப்படுத்தும் பணியை பாகிஸ்தான் அரசு தொடங்கியுள்ளது. இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், லாகூரில் வியாழக்கிழமை இது தொடர்பாக ஹஃபீஸ் சயீத் கூறியதாவது:
என் மீது எவ்வித குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் கடந்த 10 மாதங்களான என்னை வீட்டுக் காவலில் பாகிஸ்தான் அரசு வைத்திருந்தது. இப்போது, நான் நடத்தி வரும் மதரஸாக்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் என அனைத்து சொத்துகளையும் கையகப்படுத்த இருப்பதாக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பஞ்சாப், பலூசிஸ்தான், சிந்து, ஆசாத் காஷ்மீர் பகுதிகளில் நாம் ஆற்றி வரும் மக்கள் நலப் பணிகள் வெகுவாக பாதிக்கப்படும். எனவே, பாகிஸ்தான் அரசின் இந்த சட்ட விரோத மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து நீதிமன்றத்தை அணுக இருக்கிறேன். அரசு நம் மீது எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு தொண்டர்கள் யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம். அனைவரும் பொறுமை காக்க வேண்டும். நமக்கான நியாயத்தை நீதிமன்றம் மூலம் பெற முடியும் என்றார் அவர்.
அடுத்து வரும் பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஹஃபீஸ் ஏற்கெனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

2024-இல் நிச்சயம் இந்தியா கூட்டணி ஆட்சி தான்! -அகிலேஷ் யாதவ்

5ஆம் கட்டத் தேர்தலில் 57.65% வாக்குப்பதிவு

கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்தேன்; மனம் திறந்த ஆர்சிபி வீரர்!

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

SCROLL FOR NEXT