உலகம்

அணு ஆயுதங்களை இயக்குவதற்காக உன்னுடையதை விட பெரிய 'ஸ்விட்ச்' என்னிடமும் உள்ளது: கிம்முக்கு பதிலடி கொடுத்த ட்ரம்ப்! 

அணு ஆயுதங்களை இயக்குவதற்காக உன்னுடையதை விட பெரிய 'ஸ்விட்ச்' என்னிடம் உள்ளது என்று வட கொரிய அதிபர் கிம் ஜங் உன்னுக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.

DIN

நியூயார்க்: அணு ஆயுதங்களை இயக்குவதற்காக உன்னுடையதை விட பெரிய 'ஸ்விட்ச்' என்னிடம் உள்ளது என்று வட கொரிய அதிபர் கிம் ஜங் உன்னுக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. அத்துடன் தொடர்ந்து அமெரிக்காவுடன் மோதல் போக்கில் ஈடுபட்டுவருகிறது.

இதன் ஒரு கட்டமாக வடகொரிய அதிபர் கிம் தனது புத்தாண்டு கொண்டாட்ட உரையில் பேசும்போது, 'அணு ஆயுத சோதனைகளை வடகொரியா முழுமையாக முடித்துவிட்டது. அணுஆயுதங்களை இயக்குவதற்கான ஸ்விட்ச் என்னுடைய மேஜையின் மீது தயார் நிலையில் உள்ளது. நமது நாட்டின் அணுசக்தி படைகள் அமெரிக்காவிடமிருந்து நம் நாட்டைக் காக்கும் சக்தி வாய்ந்த பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்தியுள்ளன. நமது அணுஆயுதங்கள் அமெரிக்காவின் முக்கிய இடங்களை தாக்கும் திறன் படைத்தவை' என்று கூறியிருந்தார்.

இதற்கு எதிர்வினையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில், 'வட கொரிய அதிபர் கிம் தன் மேஜையின் மீது அணு ஆயுதங்களை இயக்குவதற்கான சுவிட்ச் தயாராக இருக்கிறது என்று கூறியுள்ளார். அவரிடம் யாராவது கூறுங்கள் என்னிடமும் அணுஆயுதங்களை இயக்குவதற்கான ஸ்விட்ச் உள்ளது. அது அவருடையதை விடப் பெரியது; மிக அதிக சக்தி வாய்ந்தது. வேலை செய்யும் நிலையில் உள்ளது' என்று பதிலடி கொடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

களம்காவல் புதிய வெளியீட்டுத் தேதி!

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

SCROLL FOR NEXT