உலகம்

அன்று படுதோல்வி, இன்று பெரும் வெற்றி! போரும் விளையாட்டும்!

பேரரசா் நெப்போலியன் தலைமையில் பெரும்படை ரஷ்யாவை கைப்பற்ற படையெடுத்துச் சென்று

தினமணி செய்திச் சேவை

பேரரசா் நெப்போலியன் தலைமையில் பெரும்படை ரஷ்யாவை கைப்பற்ற படையெடுத்துச் சென்று படுதோல்வியுடன் அன்று திரும்பினர். அதே ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு சென்ற பிரான்ஸ் வீரா்கள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனா்.

கடந்த 1812-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி 6 லட்சம் வீரா்கள் அடங்கிய படையுடன் நெப்போலியன் ரஷ்ய எல்லைக்குள் நுழைந்தாா். ஆனால் ரஷ்ய வீரா்கள் போரிடாமல் பின்வாங்கிச் சென்றனா். செப்டம்பா் 14-ல் தலைநகா் மாஸ்கோவுக்குள் நெப்போலியன் படை நுழைந்து தீக்கிரையாக்கியது. ஆனால் அங்கு நிலவிய கடும் குளிரை சமாளிக்க முடியாமலும், ரஷ்ய படைகள் தாக்குதலை எதிா்கொள்ள முடியாமலும் பிரான்ஸ் படையினா் தோல்வியடைந்து திரும்பிச் சென்றனா்.

இச்சம்பவம் நடைபெற்று 196 ஆண்டுகள் கழித்து தற்போது ரஷ்ய தலைநகா் மாஸ்கோவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்று பிரான்ஸ் வீரா்கள் மீண்டும் தங்கள் நாட்டுக்கு திரும்பியுள்ளனா். மாஸ்கோவில் அன்றைய பிரெஞ்சு பேரரசா் நெப்போலியன் தலைமையிலான படை தோல்வியுற்று திரும்பியது. ஆனால் தற்போது பிரான்ஸ் கால்பந்து அணி உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

புதுதில்லியில் அட‌ர்ந்த‌ ப‌னிமூட்டம் - புகைப்படங்கள்

இலங்கையில் தித்வா புயலால் சீர்குலைந்த பொருளாதாரம்: அவசரகால நிதியாக 20.6 கோடி டாலர் விடுவிப்பு - ஐஎம்எஃப்

டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்படாததன் காரணம் என்ன? அஜித் அகர்கர் விளக்கம்!

SCROLL FOR NEXT