உலகம்

வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு: சிங்கப்பூர் சென்றடைந்தார் கிம் ஜாங் உன்

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்புக்காக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூர் சென்றடைந்தார்.

DIN

சர்வதேச அளவில் அமெரிக்கா மற்றும் வடகொரிய நாடுகள் இருதுருவங்களாக விளங்கி வந்தன. வடகொரிய அதிபர் அணுகுண்டு மூலம் அமெரிக்காவை அழித்துவிடுவதாக அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வந்தார். அதன்பிறகு, பல சமாதானங்களுக்கு பிறகு இருநாட்டு அதிபர்களான டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் சிங்கப்பூரில் வரும் 12-ஆம் தேதி சந்திக்க ஏற்பாடு செய்தனர். 

இரு துருவங்களாக இருந்த பிறகு இரு நாட்டு அதிபர்களும் சந்திப்பது சர்வதேச அளவில் மிகவும் முக்கியம் வாய்ந்த சந்திப்பாக கருத்தப்படுகிறது. சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் உள்ள கோபெல்லா ஹோட்டலில் 2,500 பத்திரிகையாளர்களுக்கு முன்பு இந்த சந்திப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. 

உலகமே எதிர்நோக்கி இருக்கும் இந்த சந்திப்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தற்போது சிங்கப்பூரை சென்றடைந்துள்ளார். இவர் ஏர் சீன விமானம் மூலம் சிங்கப்பூரை சென்றடைந்துள்ளார். 

அமெரிக்க அதிபர் டிரம்ப் கனடா ஜி-7 மாநாட்டை முடிந்துக்கொண்டு சிங்கப்பூருக்கு ஏற்கனவே சென்றுவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாத்தான்குளம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி

கன்னியாகுமரி பள்ளியில் இன்று சாதனைக் குழந்தைகளுக்கு விருது வழங்கும் விழா

அம்பையில் போராட்டத்தில் ஈடுபட முயற்சி

நேரு நா்ஸிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

உடன்குடி கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

SCROLL FOR NEXT