உலகம்

டிரம்ப் - கிம் ஜோங் உன் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்து

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சிங்கப்பூரில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

DIN

உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சந்திப்பு இன்று காலை 6.30 மணிக்கு சிங்கப்பூர் கேபெல்லா ஹோட்டலில் தொடங்கியது. இவர்கள் இருவரும் இரு நாட்டு உறவுகள் குறித்து நீண்ட நேரம் பேசினர். 

அதன்பிறகு அவர்கள் சர்வதேச செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டனர். அப்போது டிரம்ப் கிம் ஜோங் உடனான சந்திப்பு என்பதே கிம் ஜோங்குடனான சந்திப்பு என்பது, அமெரிக்க வரலாற்றில் மாபெரும் வெற்றி என்றார்.

கிம் பேசுகையில், அமெரிக்க அதிபரின் கருத்துக்கு நன்றி என்றார். 

அதன்பிறகு இருநாட்டு தலைவர்களும் 48 நிமிடங்கள் தங்களது அதிகாரிகளுடன் 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்கள் மீண்டும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர். 

அப்போது கிம் பேசுகையில், கடந்த காலத்தை மறக்க முடிவுசெய்துள்ளோம். வரும் காலத்தில் உலகத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் என்றார். 

பின்னர், கிம் ஜோங்கை அமெரிக்காவுக்கு அழைப்பீர்களா என்று டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பியதற்கு அவர் நிச்சமயாக என்று பதிலளித்தார். அடுத்ததாக, நீங்கள் இருவரும் மீண்டும் சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு, நாங்கள் மீண்டும் சந்திப்போம், நிறைய முறை சந்திப்போம் என்று டிரம்ப் பதிலளித்தார்.  

பின்னர், இருவரும் பத்திரிகையாளர்கள் முன்பு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

அதன் பிறகு இருவரும் கைகுழுக்கி சென்றனர். 

இந்த ஒப்பந்தம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 தேர்தலில் இபிஎஸ்தான் முதல்வர்: நயினாா் நாகேந்திரன்

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

SCROLL FOR NEXT