முகப்பு
உலகம்

இயேசு கிறிஸ்து குறித்த மகாத்மாவின் கடிதம் அமெரிக்காவில் விற்பனைக்கு வருகிறது

இயேசு கிறிஸ்து குறித்து மகாத்மா காந்தி எழுதிய கடிதம் அமெரிக்காவில் ஏலத்தில் விற்பனைக்கு வருகிறது. இது சுமார் ரூ.32 லட்சத்து மேல் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

இயேசு கிறிஸ்து குறித்து மகாத்மா காந்தி எழுதிய கடிதம் அமெரிக்காவில் ஏலத்தில் விற்பனைக்கு வருகிறது. இது சுமார் ரூ.32 லட்சத்து மேல் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ல் தனது சபர்மதி ஆசிரமத்தில் இருந்து மகாத்மா காந்தி இந்த கடிதத்தை எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்ட அந்த கடிதத்தில் இறுதியில் மகாத்மா காந்தி கையெழுத்திட்டுள்ளார். 
அதில் அவரது கையெழுத்து எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாகவே உள்ளது. இதுவரை தனிநபர்களின் பாதுகாப்பில் இருந்து வந்த அந்த கடிதம் இப்போது, அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ராப் கலெக்ஷன்ஸ் என்ற பழங்கால பொருள்கள் ஏல நிறுவனம் மூலம் விற்பனைக்கு வந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த தலைவர் மில்டன் நியூபெர்ரி ஃபிராண்ட்ஸ், தனது சபையில் சேர வேண்டிய எழுதிய கடிதத்துக்கு பதிலளித்து மகாத்மா காந்தி இக்கடிதத்தை எழுதியுள்ளார். அதில் மகாத்மா காந்தி கூறியிருப்பதாவது:
அன்பு நண்பரே, உங்கள கடிதம் கிடைத்தது. உங்கள் சபையில் இணையுமாறு நீங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்க முடியாத நிலையில் இருக்கிறேன். 
உங்கள் சபையில் இணைபவர்களை இயேசு கிறிஸ்து என்பவர் கண்ணுக்குத் தெரியாத பரம்பபொருளாக விளங்குகிறார் என்று நீங்கள் நம்பச் செய்கிறீர்கள். 
ஆனால், நான் முயற்சி எடுத்து புரிந்து கொண்ட வரையில், அதில் உண்மை இல்லை என்றே தோன்றுகிறது.
மனித குலத்துக்கு மிகச் சிறந்த கருத்துகளை போதித்தவர்களில் இயேசு கிறிஸ்துவும் ஒருவர் என்பதே எனது நம்பிக்கை. அதைத் தவிர வேறு எதையும் என்னால் நம்ப முடியவில்லை. 
ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த சபையில் அனைவரும் இணைவதால் மத ஒற்றுமை ஏற்படும் என்றுதான் நீங்கள் நினைக்கிறீர்களா? ஒவ்வொருவரும் மற்றவர்களுடைய மதத்தை மதித்து நடந்தால் மட்டுமே மத நல்லிணக்கம் உருவாகும்.
எனது கருத்துப்படி, மாற்று மதத்தினர் மீதும் அன்பும், மரியாதையும் செலுத்தும்போதுதான் வேற்றுமைகள் மறையும். மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்புடன் வாழ வேண்டும் என்பதைத்தான் இயேசு கிறிஸ்துவும் போதித்துள்ளார் என்று அந்தக் கடிதத்தில் மகாத்மா காந்தி கூறியுள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →