உலகம்

நேபாள விமான விபத்து பலி எண்ணிக்கை 40-ஆக உயர்வு

நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40-ஆக உயர்ந்தது.

Raghavendran

வங்கதேசத்தில் இருந்து அமெரிக்கா நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் கால்பந்து மைதானம் ஒன்றில் விழுந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது.

இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக நேபாளத் தலைநகர் காத்மாண்டுவின் திரிபுவன் விமானநிலையத்தில் தரையிறங்கும் போது நிலை தடுமாறி அருகில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

இவ்விபத்து குறித்து நேபாள காவல்துறை செய்தித்தொடர்பாளர் மான்ஜோ நௌபானே தெரிவித்ததாவது:

விமானம் நிலை தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளானதில் உடனடியாக தீ பரவத் தொடங்கியது. மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்துக்குச் சென்ற ஆம்புலன்ஸ் மற்றும் போர்கால மீட்பு நடவடிக்கைக் குழு விரைந்து செயல்பட்டு வருகின்றன. 

இந்த விமானத்தில் மொத்தம் 67 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் விபத்தில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து காரணமாக காத்மாண்டு விமானங்கள் அனைத்தும் அருகிலுள்ள விமானநிலையங்களுக்குச் செல்லவும், இல்லையென்றால் திரும்பச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்கு மீட்பு நடவடிக்கைகள் முழுமை அடையும் வரை காலவரையின்றி காத்மாண்டு விமானநிலையத்தின் சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT