உலகம்

நைஜீரியாவில் தீவிரவாதிகளிடமிருந்து மீண்டு வந்த 100 பள்ளி மாணவிகள்! 

நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 100 பள்ளி மாணவிகள் அவர்களிடமிருந்து மீண்டு வந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

DIN

அபுஜா: நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 100 பள்ளி மாணவிகள் அவர்களிடமிருந்து மீண்டு வந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன 

நைஜீரியாவின் யோப் மாவட்டத்தின் டப்ஷி பகுதியில் அரசு கலை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. அங்கு கடந்த மாதம் போகோ ஹரம் தீவிரவாதிகள் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டனர். அப்பொழுது அவர்கள் அங்குள்ள 100க்கும் அதிகமான மாணவிகளை கடத்திச் சென்றனர்.

கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளை மீட்பதற்காக நைஜீரிய அரசு பல வழிகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில்  தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 100 பள்ளி மாணவிகள் அவர்களிடமிருந்து டப்ஷி பகுதிக்கு  மீண்டு வந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன  இத்தகவலை மாணவிகளின் பெற்றோர் உறுதி செய்தனர்.

கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோருக்கு ஆதரவாக செயல்படும் பெற்றோர்கள் குழுவின் தலைவர் பசீர் மான்ஸோ செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, 'கடந்த மாதம் போகோ ஹரம் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட மாணவிகள் புதன் காலை 8 மணியளவில் சுமார் ஒன்பது வாகனங்களில் டப்ஷி பகுதியில் இருக்கும் பள்ளியின் வாசலின் அருகே வந்து இறங்கினர்” என்று தெரிவித்துள்ளார்.

அதே சமயம் இந்த கடத்தல் சம்பவத்தில் ஐந்து மாணவிகள் உயிரிழந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விமானத்தில் கரப்பான் பூச்சிகள்: மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!

புதிய இணையத் தொடரில் சைத்ரா ரெட்டி!

ஓடிபி விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி

டிரம்ப் விதித்த 25% வரி... ஆடைத் தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

காணாமல் போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு: உ.பி.யில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT