முகப்பு
உலகம்

வெனிசூலா சிறைக் கலவரத்தில் 68 பேர் பலி

வெனிசூலா சிறைக்கலவரத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 68 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 30 மார்ச், 2018 at 12:53 AM
வெனிசூலா சிறைக்கு வெளியே கதறி அழும் கைதிகளின் உறவினர்கள்.
பகிர்:

வெனிசூலா சிறைக்கலவரத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 68 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
வெனிசூலாவின் காரபோபோ மாகாண சிறையில் இந்த சம்பவம் நடைபெற்றது. அதிக அளவிலான கைதிகள் அடைத்து வைக்கப்பட்ட அந்த சிறையிலிருந்து ஒரு பிரிவினர் சிறையை உடைத்து தப்ப முயன்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் சிறையின் ஒரு பகுதிக்கு தீ வைக்கப்பட்டது. சிறிது நேரத்தில், சிறை வளாகத்தின் இதரப் பகுதிகளுக்கும் தீ மளமளவென பரவியது. இதில் இரண்டு பெண்கள் உள்பட 68 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த அந்த இரண்டு பெண்களும் கைதிகளின் உறவினர்கள். கைதிகளைப் பார்க்க வந்தபோது இந்த தீ வைப்பு சம்பவத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. 
சிறை உடைப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நான்கு பேர் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
கலவரத்தைத் தொடர்ந்து கைதிகளின் உறவினர்கள் சிறையின் முன்பு அதிக அளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட கல்வீச்சில் சிக்கி காவலர் ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து, கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போலீஸார் அதிரடியாக தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
வெனிசூலாவில் சிறைக் கலவரம் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பாக மார்கரிட்டா தீவில் உள்ள சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 58 கைதிகள் தப்பிச் சென்றனர். ஆனால், அவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டனர். இதே போன்று, கடந்த 2017 ஆகஸ்டில் அமேúஸானாஸ் மாகாணத்தில் உள்ள சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 37 பேர் உயிழந்தனர். மேலும், 14 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.