திரிபோலி: லிபியாவின் தலைநகர் திரிபோலியில் அமைந்துள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தின் மீது நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 11 பேர் பலியாகினர்.
லிபிய அதிபர் முகமது கடாபி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர் 2012ம் ஆண்டில் அந்நாட்டில் தனித்த தேர்தல் நடைமுறை உருவானது. அந்நாட்டிலேயே சுயாட்சி தன்மையுடன் செயல்படக் கூடிய நம்பகத்தன்மை வாய்ந்த சில அமைப்புகளில் ஒன்றாக தேர்தல் ஆணையம் உள்ளது.
இந்நிலையில் தலைநகர் திரிபோலியில் அமைந்துள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தின் மீது நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 11 பேர் பலியாகினர்.
திரிபோலியில் தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைமையகம் அமைந்துள்ளது. புதனன்று அங்கு நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 11 பேர் பலியாகி உள்ளனர். 2 பேர் படு காயமடைந்து உள்ளனர்.தொடர்ந்து அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.