உலகம்

வடகொரிய அதிபரை நம்பும் தென் கொரிய மக்கள்- கருத்துக் கணிப்பு வெளியீடு

இரு கொரிய அதிபர்களின் சந்திப்புக்கு பின்னர் வட கொரிய அதிபர் மீது தென் கொரிய மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

Raghavendran

இரு கொரிய அதிபர்களின் சந்திப்புக்கு பின்னர் வட கொரிய அதிபர் மீது தென் கொரிய மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஏப்ரல் 27-ஆம் தேதி வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜீயின் ஆகியோர் சந்தித்துப் பேசினர். பல காலமாக தொடர்ந்து இருந்து வந்த பகைக்கு இடையே இவர்களின் இந்த சந்திப்பு உலக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

இதையடுத்து வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், தற்போது தென் கொரிய மக்களால் அதிகளவில் நம்பப்படுவதாக அந்நாட்டு ஊடகம் எடுத்துள்ள கருத்துக் கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியா முழுவதும் நடத்தப்பட்ட அந்த கருத்துக் கணிப்பின் முடிவில் 78 சதவீத மக்கள் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக 17 சதவீத மக்கள் அதீத நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

அதுபோல இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு வெற்றிகரமாக அமைந்ததாக 89 சதவீத மக்கள் நம்பிக்கை தெரிவித்ததாக கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனிக் கட்சி தொடங்கமாட்டேன் - ஓ. பன்னீா்செல்வம்

இந்தியாவின் முதல் ‘ஏா் டாக்சி’ -‘என்விடியா’ உடன் கைகோத்த சென்னையின் ‘தி இ-பிளேன்’

அதானி பவா்-தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் இடையே 558 மெகாவாட் மின் விநியோகம் ஒப்பந்தம்

நடப்பு நிதியாண்டில் இந்திய ஐ.டி. துறை வருவாய் 31,500 கோடி டாலா் -நாஸ்காம் கணிப்பு

சில்லறை விற்பனை கடன்கள்: ரூ.162 லட்சம் கோடியை எட்டியது -18% வளா்ச்சி

SCROLL FOR NEXT