உலகம்

ஆப்கானிஸ்தானில் ஏழு இந்தியப் பொறியாளர்கள் கடத்தல் 

DIN

காபூல்: ஆப்கானிஸ்தானில் அரசுக்கு சொந்தமான மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான நிலையத்தில் பணியாற்றி வந்த  ஏழு இந்தியப் பொறியாளர்கள் தீவிரவாதிகளால் கடத்தபட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் செயல்பட்டு வரும் அரசுக்கு சொந்தமான முக்கிய மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான நிலையங்களில், இந்தியாவை சேர்ந்த சுமார் 150 பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் அந்நாட்டின் பாக்லான் மாகாணத்தில் அமைந்துள்ள மின் பகிர்மான நிலையத்தில்  பணியாற்றி வரும் சிலர், ஞாயிறன்று ஒரு சிறிய பேருந்தில் பாக்-இ-ஷாமல் பகுதியில் உள்ள மின்சார உற்பத்தி நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரெனென்று ஆயுதங்களுடன் அவர்களை எதிர்கொண்ட மர்ம நபர்கள் அந்த வாகனத்தை ஒட்டி வந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த டிரைவர் ஒருவர் மற்றும் இந்தியாவை சேர்ந்த 7 பொறியாளர்களை மொத்தமாக வாகனத்துடன் கடத்திச் சென்றனர்.

ஏழு இந்தியர்கள் கடத்தப்பட்ட தகவலை ஆப்கனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT