முகப்பு
உலகம்

சிங்கப்பூரில் தமிழ்மொழி எப்போதும் ஆட்சிமொழியாக இருக்கும்: சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் உறுதி

சிங்கப்பூரில் தமிழ்மொழி எப்போதும் ஆட்சிமொழியாக இருக்கும் என்று அந்நாட்டு வர்த்தக உறவு மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஈஸ்வரன்

Updated On : 14 மே, 2018 at 3:56 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

சிங்கப்பூரில் தமிழ்மொழி எப்போதும் ஆட்சிமொழியாக இருக்கும் என்று அந்நாட்டு வர்த்தக உறவு மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஈஸ்வரன் உறுதியளித்துள்ளார். 

சிங்கப்பூரில் உள்ள 4 அதிகாரப்பூர்வ ஆட்சி மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. பள்ளி, கல்லூரிகளில் தமிழ், தாய் மொழியாக கற்பிக்கப்பட்டு வருவதுடன் சிங்கப்பூர் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அந்நாட்டு கரன்சியான டாலரிலும் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது. அத்தகைய மரியாதை சிங்கப்பூரில் தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சர் ஈஸ்வரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ் மொழி தொடர்ந்து அதிகாரப்பூர்வ ஆட்சிமொழியாக இருக்கும் என்றும் தமிழ் மொழிக்கு ஆதரவு என்பதிலும் காப்பதிலும் அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவித்தார். 

Advertisement

மேலும் இளைஞர்கள் தினந்தோறும் அதிகயளவில் தமிழ் மொழியை பயன்படுத்தி அந்த மொழிக்கு உயிரோட்டம் அளிக்க வேண்டும் என்றும் தமிழ் மொழி மற்றும் அதன் கலாசாரத்தை கொண்டாடுவதற்கும், ஊக்குவிப்பதற்கும், இளைய தலைமுறையினர் முயற்சி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.