முகப்பு
உலகம்

பிரதமர் மோடிக்கு நேபாளப் பிரதமர் நன்றி

நேபாளத்துக்கு வருகை தந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டுப் பிரதமர் கே.பி.சர்மா ஒலி நன்றி தெரிவித்தார்.

Updated On : 14 மே, 2018 at 5:33 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:32 PM

நேபாளத்துக்கு வருகை தந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டுப் பிரதமர் கே.பி.சர்மா ஒலி நன்றி தெரிவித்தார்.
சமூக வலைதளமான சுட்டுரையில் சர்மா ஒலி வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரதமர் மோடி நேபாளம் வந்தபோது பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினோம். அப்போது, இரு நாடுகளுக்கு இடையே நிலுவையில் இருக்கும் பல்வேறு திட்டங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று இருவரும் பரஸ்பரம் முடிவு செய்தோம்.
நேபாள நிறுவன தினத்துக்குள் அனைத்து நிலுவை திட்டங்களும் நிறைவேற்றப்படும்.
பிரதமர் மோடியின் வருகை இருதரப்பு உறவை புதிய உச்சத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது என்று அந்தப் பதிவில் சர்மா ஒலி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.