உலகம்

இலங்கை உள்நாட்டுப் போர்: 9-ஆம் ஆண்டு நினைவஞ்சலி

DIN

இலங்கையில் கடந்த 2009-இல் இறுதிப் போரின்போது கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முள்ளிவாய்க்காலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், கடந்த 2009, மே 18-இல் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டதையடுத்து, அங்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது. இதில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது. இதில் 5,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்று விளக்குகள் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாகாண சி.வி.விக்னேஷ்வரன் பங்கேற்றார். தமிழ் அரசியல் கட்சியை சேர்ந்த வேறு முக்கிய தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT