உலகம்

உலகத்திற்கான சீனாவின் கதவுகள் மூடப்படாது: ஷிச்சின்பிங் உரை

திருமலை சோமு

முதலாவது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி சீனாவின் ஷாங்காய் மாநகரில் நடக்கிறது. சுமார் 172 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த தலைவர்கள், வணிக மற்றும் தொழிற்துறையினர்கள், சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர். 

சீன அதிபர் ஷிச்சின்பிங் ஷாங்காய் நகரில் முதல் சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சியில் (CIIE) கலந்து கொண்ட வெளிநாட்டு தொழில்முனைவோர் பிரதிநிதிகளை இன்று திங்கள்கிழமை சந்தித்தார்.

பின்னர் அவர் சிறப்புரை நிகழ்த்திய போது  சீன தனது சந்தையை உலகத்திற்கு திறந்து வைக்கும் மிக முக்கிய கொள்கையுடன் புதிய சுற்று நடவடிக்கையின் உயர் தொடக்கமாக இந்த பொருட்காட்சி நடவடிக்கை அமைத்துள்ளது. உலக பொருளாதார வளர்ச்சிக்கான வலுவான வேகத்தை தருவதாக இது இருக்கும் என்றும் அவர் கூறினார். மேலும் வெளிப்படையான உலகளாவிய பொருளாதாரத்தை கட்டமைக்க கூட்டு முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்து, அனைத்து நாடுகளும் பாதுகாப்புவாதத்தையும், ஒருதலைப்பட்சவாதத்தையும் ஒரு தெளிவான நிலைப்பாட்டில் எதிர்த்து நிற்க வேண்டும்.

பாதுகாப்புவாதம் மற்றும் ஒருதலைப்பட்சவாத அலைகள் உலகளாவிய வளர்ச்சிக்கு அச்சுறுத்தலைக் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், இந்த இறகுமதி பொருட்காட்சி சுதந்திர வர்த்தகம் மற்றும் உலகப் பொருளாதாரத்திற்கு உறுதியளிக்கிறது. ஜெர்மன் இயந்திர கருவிகள், ஜப்பானிய ரோபோக்கள் மற்றும் யு.எஸ். ஆஸ்திரேலிய ஒயின், பிரேசிலிய பண்ணைப் பொருட்கள் மற்றும் தென் சூடானிய கைவினைத் தயாரிப்புகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என உலகளாவிய பல்வேறு தரம் வாய்ந்த காட்சிப் பொருட்களுடனும் புதிய சகாப்தம், பகிரப்பட்ட எதிர்காலம்" என்ற முழக்கத்துடனும்  இந்த பொருட்காட்சி நடத்தப்படுகிறது.

சீனா தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக உலகின் இரண்டாவது மிகப்பெரிய வியாபார இறக்குமதியாளராக இருந்து வருகிறது. சீனாவின் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களும் சேவைகளும் 30 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளன உலகத்திற்கான சீனவின் கதவுகள் மூடப்படாது என்றுமே திறந்திருந்திருக்கும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT