உலகம்

அமெரிக்க வெள்ளை மாளிகையில் வருடாந்திர தீபாவளி கொண்டாட்டம் நிறுத்தம் 

அமெரிக்க வெள்ளை மாளிகையில் 15 வருடங்களாக பின்பற்றப்பட்டு வந்த வருடாந்திர தீபாவளி கொண்டாட்டம் இவ்வருடம் நடைபெறவில்லை. 

IANS

நியூயார்க்: அமெரிக்க வெள்ளை மாளிகையில் 15 வருடங்களாக பின்பற்றப்பட்டு வந்த வருடாந்திர தீபாவளி கொண்டாட்டம் இவ்வருடம் நடைபெறவில்லை. 

அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கடந்த 2003-ஆம் வருடம் அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடும் வழக்கத்தைக் கொண்டு வந்தார்.  அவருக்குப் பின் வந்த அதிபரான ஓபாமாவும் தடையின்றி அதனை அப்படியே தொடர்ந்து வந்தார். 

இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் 15 வருடங்களாக பின்பற்றப்பட்டு வந்த வருடாந்திர தீபாவளி கொண்டாட்டம் இவ்வருடம் நடைபெறவில்லை. 

தற்போதைய அமெரிக்க அதிபரான ட்ரம்ப் கடந்த வருடம் கூட வெள்ளை மாளிகையின் பாரம்பரிய முறைப்படி விளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடினார். 

ஆனால் தற்போது அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளது. திங்கள் கிழமை  வரை பிரசாரம் நடைபெற்ற நிலையில், செவ்வாயன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் உடனடியாக தேர்தல் முடிவுகள் வெளிவரத் துவங்கியுள்ளது.

எனவே  இதன் காரணமாக இம்முறை 15 வருட பாரம்பரியத்திற்கு மாற்றாக தீபாவளி இந்த வருடம் கொண்டாடப்படவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT