உலகம்

இந்திய அமெரிக்கருக்கு முக்கியப் பதவி: டிரம்ப் திட்டம்

DIN

அமெரிக்காவில் உள்ள தேசிய அறிவியல் வாரியத்தின் உறுப்பினராக இந்திய வம்சாவளி அமெரிக்கரும், பேராசிரியருமான சுரேஷ் வி. கேரிமெல்லாவை நியமிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இண்டியானா மாகாணத்தில் உள்ள பர்டியு பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் துறையின் பேராசிரியராக பணியாற்றி வரும் கேரிமெல்லா, தேசிய அறிவியல் அறக்கட்டளையின் ஆராய்ச்சி மையத்தில், குளிரூட்டுதல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநராகவும் உள்ளார். அவர், கடந்த 1985-ஆம் ஆண்டில் சென்னை ஐஐடியில் பி.டெக். பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.
 தேசிய அறிவியல் வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்படும் கேரிமெல்லா, 2024 மே 10-ஆம் தேதி வரையிலான 6 ஆண்டுகளுக்கு அந்தப் பதவியில் இருப்பார் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கேரிமெல்லாவுடன் சேர்த்து, மொத்தம் 7 பேர் அந்த வாரிய உறுப்பினர்கள் பதவிக்கு நியமிக்கப்படுகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT