உலகம்

அமெரிக்காவின் முதல் ஹிந்து எம்.பி. அதிபர் தேர்தலில் போட்டி?

தினமணி

அமெரிக்காவில் வரும் 2020-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஹவாய் மாகாண எம்.பி. துளசி கபார்ட் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 இதுகுறித்து, லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், துளசி கபார்டை இந்திய-அமெரிக்க மருத்துவர் சம்பத் சிவாங்கி அறிமுகப்படுத்திக் கூறுகையில், "வரும் 2020-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராக இவர் பொறுப்பேற்கலாம்' என்று அறிவித்தார். அதற்கு, அந்தக் கூட்டத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பு அளித்தனர்.
 ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த துளசி கபார்ட், ஹவாய் மாகாணத்தின் 2-ஆவது தொகுதி எம்.பி.யாக பொறுப்பு வகித்து வருகிறார். சமோவா தீவுகளைப் பூர்விகமாக் கொண்ட இவர்தான் அமெரிக்காவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT