உலகம்

சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய ஸ்டேன் லீ காலமானார்!

DIN


ஸ்பைடர்மேன், அயன்மேன் உள்ளிட்ட பல சூப்பர் ஹீரோ கேரக்டர்களை உருவாக்கிய காமிக்ஸ் கிரியேட்டரான ஸ்டேன் லீ(95) உடல்நிலை குறைபாடு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 1961 ஆம் ஆண்டு ஜேக் கிர்பி என்பவருடன் இணைந்து, முதல் முறையாக பேன்டாஸ்டிக் போர் காமிக்ஸை வடிவமைத்த ஸ்டேன் லீ, தொடர்ந்து ஸ்பைடர் மேன், பிளாக் பாந்தர், ஹல்க் உள்ளிட்ட பிரபல காமிக்ஸ்களை உருவாக்கினார். இந்தக் காமிக்ஸ்கள் படங்களாக எடுக்கப்பட்ட போது, அந்தப் படங்கள் எல்லாவற்றிலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.  

ஹாலிவுட்டில் தற்போது பிரம்மாண்ட வெற்றியைப் பெறும் படங்கள் என்றால், அது சூப்பர் ஹீரோ படங்கள்தான். அவற்றிற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். 

அதிலும் மார்வல் காமிக்ஸின் அசாத்திய திறனில் சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரங்களை வைத்து உருவாக்கப்பட்ட ஸ்டேன் லீ படங்கள் மிகப்பெரிய வசூல் சாதனைப் படைத்து வருகின்றன. அயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, பிளாக் பாந்தர், ஸ்பைடர் மேன், ஹல்க், எக்ஸ் மேன், அவெஞ்சர்ஸ், ஹல்க், தோர் உள்பட பல தமது கற்பானை திறத்தால் வடிவமைத்து பல சூப்பர் ஹீரோ வெற்றிப் படங்களை உருவாக்கி உலகம் முழுவதும் கோலோச்சியவர் ஸ்டேன் லீ. 

மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் ஆசிரியராகவும், தலைவராகவும், பதிப்பாளர், தயாரிப்பாளர், எழுத்தாளர் போன்ற பல பொறுப்புகளை வகித்து வந்த ஸ்டேன் லீ, நிமோனியா மற்றும் பார்வைக் குறைபாடு பாதிப்பு காரணமாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ஜெல்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12 மணியளவில் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதனை ஸ்டேன் லீ குடும்பத்தினரும் உறுதிபடுத்தி உள்ளனர். ஸ்டான் லீயின் மனைவி ஜுவான் 2017-ல் மரணமடைந்தார். லீ-க்கு ஜேசி லீ என்கிற மகள் உள்ளார். 

ஸ்டேன் லீயின் திடீர் மரணத்தால், ஹாலிவுட் மற்றும் சூப்பர் ஹீரோ ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். 

2010 ஆம் ஆண்டில், "கிரேட் பவர்: தி ஸ்டான் லீ ஸ்டோரி" பெயரில் அவரது வாழ்க்கையைப் பற்றி ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இதில் நடிகர்கள் கென்னத் பிரானாக், நிக்கோலஸ் கேஜ், மைக்கேல் சிக்லிஸ் மற்றும் கிர்ஸ்டென் டன்ஸ்ட் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT