உலகம்

இண்டர்போல் அமைப்பின் தலைவராக தென் கொரியாவின் கிம்ஜோங் யாங் தேர்வு 

இண்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் தலைவராக தென் கொரியாவின் கிம்ஜோங் யாங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

DIN

லியான்ஸ்: இண்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் தலைவராக தென் கொரியாவின் கிம் ஜோங் யாங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

சர்வதேச நாடுகளில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக இண்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் தலைமையகம் பிரான்ஸ் நாட்டின் லியான்ஸ் நகரில் உள்ளது. 

இந்த அமைப்பின் தலைவராக இருந்த சீனாவைச் சேர்ந்தவரான மெங் ஹோங்வெய், சில நாட்களுக்கு முன்னர் சீனாவில் சொந்த ஊருக்கு சென்ற போது திடீரென  மாயமானர்.  பின்னர்  லஞ்சம் பெற்ற புகாரில் அவர் கைது செய்யப்பட்டதாகவும், அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டதாகவும் பின்னர் சீன அரசு விளக்கம் அளித்தது.

இதனையடுத்து இண்டர்போல் துணைத் தலைவராக இருந்த  ரஷ்யாவின் அலெக்சாண்டர் புரோகோப்சக் தலைவர் பதவிக்கான போட்டியில் களமிறங்கினார்.  அவருக்கு எதிராக தென் கொரியாவின் கிம் ஜோங் யாங் என்பவர்  போட்டியிட்டார். அவருக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆதரவளித்தன. 

இந்நிலையில் இண்டர்போல் அமைப்பின் தலைவராக தென் கொரியாவின் கிம் ஜோங் யாங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்  என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

SCROLL FOR NEXT