உலகம்

அதிகரிக்கும் காற்று மாசு: கட்டுப்படுத்த பாரீஸ் என்ன செய்கிறது தெரியுமா?  

DIN

பாரீஸ்: அதிகரித்து வரும் காற்று மாசினைக் கட்டுப்படுத்தும் பொருட்டு பிரான்சின் தலைநகரான பாரீஸ் புதிய நடைமுறை ஒன்றைக் கொண்டு வரவுள்ளது. 

ஐரோப்பிய நாடுகளிலேயே பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தான் காற்று மிக அதிகமாக மாசுபட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை அந்த நகர நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்று கிழமையிலும் நகரின் முக்கிய பகுதிகளில் கார்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இரு சக்கர வாகனங்கள், மிதி வண்டிகள் மற்றும் சாலையோர நடைபாதை ஆகியவற்றை மட்டுமே அன்று ஒரு நாள் பொதுமக்கள் பயன்படுத்தும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இருந்த போதிலும் டெலிவரி வாகனங்கள் மற்றும் மருத்துவ அவசர வாகனங்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

SCROLL FOR NEXT