உலகம்

ஊழல் வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபருக்கு 15 ஆண்டு சிறை; ரூ. 8 கோடி அபராதம் 

ஊழல் வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபர் லீ ம்யூங் பாக்கிற்கு 15 ஆண்டு சிறைதணடனையும், ரூ. 8 கோடி அபராதமும் விதித்து தென்கொரிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது 

IANS

சியோல்: ஊழல் வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபர் லீ ம்யூங் பாக்கிற்கு 15 ஆண்டு சிறைதணடனையும், ரூ. 8 கோடி அபராதமும் விதித்து தென்கொரிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது 

2008-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை தென் கொரிய அதிபராக இருந்தவர் லீ ம்யூங் பாக். இவர் தனது ஆட்சிக்காலத்தில் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

அதிலும் குறிப்பாக அவரது சகோதரர் பெயரில் இயங்கி வந்த DAS எனும் நிறுவனத்தில் போலி கணக்குகளை உருவாக்கி பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது பலத்த குற்றசாட்டு எழுந்தது. அதன்பேரில் அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. 

இந்நிலையில் ஊழல் வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபர் லீ ம்யூங் பாக்கிற்கு 15 ஆண்டு சிறைதணடனையும், ரூ. 8 கோடி அபராதமும் விதித்து தென்கொரிய நீதிமன்றம் வெள்ளியன்று தீர்ப்பளித்துள்ளது 

வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட நான்காவது அதிபர் லீ ம்யூங் பாக் என்பது குறிப்பிடத்தக்கது.   
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT