முகப்பு
உலகம்

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேச்சு: இலங்கை முன்னாள் அமைச்சர் கைது

விடுதலைப் புலிகள் மீண்டும் புத்துயிர் பெற வேண்டும் என்று கருத்து தெரிவித்த இலங்கை முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

Updated On : 9 அக்டோபர் 2018, 1:08 am IST
பகிர்:


விடுதலைப் புலிகள் மீண்டும் புத்துயிர் பெற வேண்டும் என்று கருத்து தெரிவித்த இலங்கை முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் வடபகுதி மக்கள் சுதந்திரமாக இருந்தனர். தற்போது சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. இந்தச் சூழலில் மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பு எழுச்சி பெற வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்  என்று கூறியிருந்தார்.
அவரது இந்த கருத்துக்கு நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து தனது அமைச்சர் பதவியை விஜயகலா கடந்த ஜூலை மாதம் ராஜிநாமா செய்தார். இந்நிலையில், திங்கள்கிழமை அவர் கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.