உலகம்

அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்கள் இருவருக்கு 2018 பொருளாதார நோபல் அறிவிப்பு  

பருவ நிலை மாற்றமானது பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தொடர் பாதிப்புகள் குறித்த ஆய்விற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்கள் இருவருக்கு 2018-ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்ப

DIN

ஸ்டாக்ஹோம்:   பருவ நிலை மாற்றமானது பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தொடர் பாதிப்புகள் குறித்த ஆய்விற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்கள் இருவருக்கு 2018-ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.      

முன்னதாக 2018-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் கடந்த வாரம் திங்கள் முதல் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதலாவதாக மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பும், தொடர்ந்து செவ்வாயன்று இயற்பியலுக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டது. பின்னர் அமைதிக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பும் வெளியானது.  ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் பரிசுக் கமிட்டியினர் இதனை வெளியிட்டனர். 

இந்நிலையில் பருவ நிலை மாற்றமானது பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தொடர் பாதிப்புகள் குறித்த ஆய்விற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்கள் இருவருக்கு 2018-ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.      

அமெரிக்காவின் வில்லியம் நார்தாஸ் மற்றும் பால் ரோமர் ஆகிய இருவருக்கும் 2018-ஆம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசானது கூட்டாக வழங்கப்படுகிறது.       

உலகம் முழுவதும் பருவ நிலை மாற்றமானது பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தொடர் பாதிப்புகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்த நீண்ட கால ஆராய்ச்சிக்காக அவர்களுக்கு இந்த விருதானது பகிர்ந்து வழங்கப்படுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

மேலைத்தவம் இன்மை

இறுதி ஆட்டத்தில் ஜொலித்த ஷஃபாலி, தீப்தி: தென்னாப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு!

இறுதி ஆட்டத்தைக் கண்டுகளித்த சச்சின் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT