உலகம்

செய்தியாளர் மாயமான விவகாரம்: குற்றவாளி சவூதி பட்டத்து இளவரசருக்கு நெருக்கமானவர்?

DIN


செய்தியாளர் கஷோகி மாயமான விவகாரத்தில் சந்தேகிக்கப்படும் நபர், சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு நெருக்கமானவர் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:
இந்த மாதத் தொடக்கத்தில் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்குச் சென்ற செய்தியாளர் ஜமால் கஷோகி, அதற்குப் பிறகு மாயமானது தொடர்பான விவகாரத்தில் ஐந்து நபர்களை முக்கிய குற்றவாளிகளாக துருக்கி அதிகாரிகள் பட்டியலிட்டுள்ளனர்.
இவர்களில் முதலாவது நபர், சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார்.
பொது இடங்களில், இளவரசருடன் அவரை அடிக்கடி பார்க்க முடியும்.
குற்றப் பட்டியலில் உள்ள மேலும் 3 பேர், பட்டத்து இளவரசரின் பாதுகாப்புப் படையோடு தொடர்புடையவர்கள் ஆவர்.
ஐந்தாவது நபர், உயர் நிலையில் உள்ள தடயவியல் மருத்துவர் ஆவார் என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபிய செய்தியாளரான ஜமால் கஷோகி, சர்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து லண்டன் தப்பிச் சென்றார்.
தற்போது அமெரிக்காவில் வசித்து வந்த அவர், அங்கு வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் கட்டுரைகள் எழுதி வந்தார்.
சவூதி அரச குடும்பத்தோடு நெருக்கமாக இருந்தாலும், அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் அவர் கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.
இந்தச் சூழலில், துருக்கி நாட்டுப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய அவருக்கு, அந்த நாட்டுச் சட்டப்படி சில ஆவணங்கள் தேவைப்பட்டன. அதனைப் பெறுவதற்காக அவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு இந்த மாதம் 2-ஆம் தேதி சென்றார். ஆனால், அதற்குப் பிறகு அவரைக் காணவில்லை.
தூதரகத்துக்குள் அவரை சவூதி அனுப்பிய ஆட்கள் கொன்று விட்டதாகவும், கருப்பு நிற காரில் அவரது உடலை வெளியே கொண்டு சென்றதாகவும் துருக்கி கூறி வருகிறது.
துணைத் தூதரகத்தில், செய்தியாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதற்கான ஆடியோ ஆதாரங்கள் துருக்கி அதிகாரிகளிடம் இருப்பததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆதாரங்களை வெளியிட்டால், சவூதி தூதரகத்தில் துருக்கி வேவு பார்த்து வந்த விவகாரம் சர்ச்சையாகி விடும் என்பதால் அவற்றை வெளியிடுவதற்கு துருக்கி தயக்கம் காட்டி வருகிறது என்று ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில், இந்த விவகாரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ செவ்வாய்க்கிழமை சவூதி அரேபியாவிலும், புதன்கிழமை துருக்கியிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT