உலகம்

ஊழல் குற்றச்சாட்டு: சீனாவின் முன்னாள் நிதியமைச்சர் கைது 

DIN

பீஜிங்: ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக சீனாவின் முன்னாள் நிதியமைச்சர் சாங் ஷாவ்சுன் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் மந்திரிகள் மற்றும் உயரதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்குமாறு சீன அதிபர் சி ஜின்பிங்  உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளின் விளைவாக பல முன்னாள் அமைச்சர்ககளை, முன்னாள் இந்நாள் உயரதிகாரிகளை லஞ்ச, ஊழல் ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக சீனாவின் முன்னாள் நிதியமைச்சர் சாங் ஷாவ்சுன் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, நிதி முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார். முழுமையான குற்றச்சாட்டு என்ன என்பது தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT