உலகம்

இலங்கை தலைநகர் கொழும்புவில் அமைச்சரின் பாதுகாவலர்கள் துப்பாக்கிச்சூடு; பதற்றம்  

DIN

கொழும்பு: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்புவில் அமைச்சரின் பாதுகாவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கையில் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூட்டணி அரசு கடந்த 2015ஆம் ஆண்டில் அமைந்தது. அவரது அரசுக்கு சிறீசேனாவின் யுபிஎஃப்ஏ கட்சியும் ஆதரவளித்தது. இந்நிலையில், இலங்கையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் ராஜபட்சவின் புதிய கட்சி அதிக இடங்களில் வென்றது. இதைத் தொடர்ந்து, ரணில் - சிறீசேனா கூட்டணியில் விரிசல் உருவானது.

ரணில் அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ராஜபட்ச கட்சியும், சிறீசேனா கட்சியும் கூட்டாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கடந்த ஏப்ரல் மாதம் கொண்டு வந்தன. எனினும், அந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரணில் தோற்கடித்தார். இதன்பிறகு, ரணிலுக்கும், சிறீசேனாவுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது. அதன் தொடர்ச்சியாகவே, பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கிவிட்டு, ராஜபட்சவை சிறீசேனா கடந்த வெள்ளியன்று நியமித்தார்.

இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்துவரும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தை வரும் நவம்பர் மாதம் 16-ஆம் தேதி வரை அதிபர் மைத்ரிபால சிறீசேனா முடக்கி வைத்துள்ளார். இந்நிலையில் இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே நீடிப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா அங்கீகாரம் அளித்துள்ளார்  இதனால் இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. 

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்புவில் அமைச்சரின் பாதுகாவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பினை  ஏற்படுத்தியுள்ளது. 

ரணிலின் அமைச்சரவையில் பெட்ரோலியத்துறை அமைச்சராக இருப்பவர் அர்ஜுன ரணதுங்க. ஞாயிறு மாலை கொழும்புவில் அமைந்துள்ள இலங்கை பெட்ரோலிய துறையின் தலைமையகத்திற்கு ரணதுங்க தனது பாதுகாவலர்களுடன் வந்துள்ளார். அங்கு ஆவணம் ஒன்றை எடுக்க முயன்ற போது, அங்குள்ள ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவித்து கூச்சல் எழுப்பியுள்ளனர்.அத்துடன் அங்கு நிலைமை சற்று கட்டுக்கடங்காமல் போகவே அமைச்சரின் பாதுகாவலர்கள் பெட்ரோலிய துறை ஊழியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

இதில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்ட இருவரும் மருத்துவமனையிகள அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தலைநகர் கொழும்புவில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT