பாகிஸ்தானில் இன்று அதிபர் தேர்தல்
பாகிஸ்தானில் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை (செப். 4) நடைபெறுகிறது.
பாகிஸ்தானில் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை (செப். 4) நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தும் எதிர்க்கட்சிகளின் முயற்சி தோல்வியடைந்தது.
இதையடுத்து, ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் சார்பில் போட்டியிடும் ஆரிஃப் அல்வி வெற்றி பெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவாôர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளதாகவும், நாடாளுமன்றம் மட்டுமின்றி நான்கு மாகாண பேரவைகளிலும் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வக்கெடுப்பு நடைபெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அதிபராகப் பொறுப்பு வகித்து வரும் மம்னூன் ஹுசைனின் பதவிக் காலம் இந்த மாதம் 8-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
எனினும், அந்தப் பதவிக்காக மீண்டும் போட்டியிடுவதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இந்தத் தேர்தலில் ஆரிஃப் அல்வி மட்டுமின்றி, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செளத்ரி அய்த்ஸாஸ் ஆஷன் மற்றும் ஜமாத்-ஏ-உலேமா (எஃப்) கட்சியின் தலைவர் மெளலானா ஃபஸல்-உர்-ரஹ்மான் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.