முகப்பு
உலகம்

விண்வெளிக்கு முதல் முறையாக 2 வீரர்களை அனுப்புகிறது யுஏஇ

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) சார்பில் முதல்முறையாக இரண்டு வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர்.

Updated On : 4 செப்டம்பர், 2018 at 2:37 AM
பகிர்:


சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) சார்பில் முதல்முறையாக இரண்டு வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர். அவர்களது பெயரை, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தும் வெளியிட்டுள்ளார்.
ஹஸ்ஸா அல்-மசூரி (34), சுல்தான் அல் நேயாதி (37) ஆகிய அந்த இரு வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகத்தின் எதிர்கால சந்ததியினருக்கு முன்னோடியாக திகழ்வர்' என்று சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த 4 பேர், அடுத்த 5 ஆண்டுகளில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பப்படுவர் என்றும், இதற்காக 5.4 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.38,000 கோடி) செலவிலான திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் ஷேக் முகமது கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ஹோப்' என்ற பெயரிலான திட்டம் 2021-ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் என்று யுஏஇ ஏற்கெனவே அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.