உலகம்

மூக்கில் குத்தி பின்கழுத்தில் வெளியே வந்த ஸ்பூன்: உயிர் பிழைத்த அதிசய சிறுவன்

அமெரிக்காவின் சிகாகோ அருகே மரத்தில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கீழே விழும் போது அவன் முகத்தில் குத்திய முள்கரண்டி பின் கழுத்தைத் துளைத்துக் கொண்டு வெளியே வந்தது.

ENS


சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோ அருகே மரத்தில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கீழே விழும் போது அவன் முகத்தில் குத்திய முள்கரண்டி பின் கழுத்தைத் துளைத்துக் கொண்டு வெளியே வந்தது.

சேவியர் கன்னிங்கம் என்ற 10 வயதுச் சிறுவன் மரத்தில் இருந்து விழுந்ததில், கீழே இருந்த இறைச்சிகளைக் குத்தி வைக்கும் கரண்டி, மூக்குக்கு மேல் குத்தி பின் கழுத்து வழியாக வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தைக் கண்டுபிடித்தனர். உடலின் ஒரு பக்கத்தில் குத்தி மறுபக்கத்தில் வெளியே வந்த கரண்டி, அவனது மூளையையோ, முதுகுத் தண்டையோ, கண் பகுதியையோ, முக்கிய நரம்புகள் எதையுமோ சீண்டவே இல்லை.

நூலிழையில் எதையும் தொட்டுக் கொள்ளாமல் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக சிறுவன் உயிர் பிழைத்து, தற்போது குணமடைந்து வருகிறான். இவன் நிச்சயம் கோடியில் ஒருவன் என்று ஆச்சரியத்தோடு கூறுகிறார்கள் மருத்துவர்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

ஸ்ரீ எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மொபட்டில் சென்ற பெண்ணிடம் வழிப்பறி

பள்ளியில் ஆண்டு விழா

நரியம்பட்டில் எருது விடும் திருவிழா

SCROLL FOR NEXT