உலகம்

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு: விளையாடிக்கொண்டிருந்த 7 சிறுவர்கள் சாவு

DIN

ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி 7 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

மிஹ்தர்லாம் புறநகர் பகுதியில் நடத்தப்பட்ட இந்த குண்டுவெடிப்பு குறித்து அம்மாகாண ஆளுநரின் செய்தித்தொடர்பாளர் அஸதுல்லா தவ்லத்ஸி கூறியதாவது:

சிறுவர்கள் அனைவரும் தங்களின் வீடுகளுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த போது இந்த மர்ம குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

ஒவ்வொரு மாதமும் மர்மமான முறையில் நடக்கும் வெடிகுண்டுத் தாக்குதல்களால் மட்டும் ஆப்கானிஸ்தானில் சராசரியாக 120 பேர் உயிரிழப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுவரை ஆப்கானிஸ்தானில் 3 ஆயிரத்து 400 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு ஆய்வு நடத்தப்பட்டு மர்ம வெடிபொருட்கள் செயலிழக்க செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஆயிரத்து 700 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு இன்னும் ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தினத்தையொட்டி விடுமுறை விடாத நிறுவனங்களுக்கு அபராதம்

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்க மாநில மாநாடு

நாளை திருமலையில் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி

பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் கெளரவிப்பு

தீவிர சோதனைக்குப் பிறகே ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்களுக்கு அனுமதி

SCROLL FOR NEXT