உலகம்

நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ்களுக்கு புலிட்ஸர் விருது

DIN

ஊடகத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும் உயரிய அங்கீகாரமான "புலிட்ஸர்' விருது நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்பான புலனாய்வு செய்திகளை வெளியிட்டதற்காக இந்தப் பத்திரிகைகள் கெüரவிக்கப்பட்டுள்ளன.
 நியூயார்க்கில் தேர்வுக் குழுவினர் இந்த அறிவிப்புகளை வெளியிட்டனர். டிரம்ப் குடும்பத்தினரின் சொத்துகள் மற்றும் வரி ஏய்ப்புடன் விரிவுபடுத்தப்பட்ட அவர்களது வர்த்தக சாம்ராஜ்யம் உள்ளிட்டவை குறித்து செய்தி வெளியிட்டதற்காக நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு விருது வழங்கப்படுகிறது.
 மியான்மரில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது, ரோஹிங்கயா இன முஸ்லிம்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவத்தினர் நடத்திய வன்கொடுமைகளை படம்பிடித்து வெளியிட்ட "ராய்ட்டர்ஸ்' செய்தி நிறுவனத்துக்கு புலிட்ஸர் விருது வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் செய்தி சேகரித்த ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் இருவர் அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT